அரிசி குடோனாக மாறும் ராஜபக்சே கட்டிய விமான நிலையம்

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ச தனது சொந்த ஊரில் கட்டிய விமான நிலையம், தற்போதைய அரசால் அரிசி குடோனாக மாற்றப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்தல என்ற இடத்தில் ராஜபக்சே விமான நிலையத்தைக் கட்டி திறந்தும் வைத்தார். அதற்கு போதிய வரவேற்பு இல்லாததால், தற்போது ஒரே ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுகிறது.

இந்த நிலையில், விமான நிலையத்தை மூடிவிட்டு அரிசி குடோனாக மாற்றும் நடவடிக்கையில் புதிய அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று விமான நிலையத்தின் சரக்கு குடோனில், லாரிகளில் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் …