அசத்திய ஆசிரியர் தின விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மற்றும் இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம் சார்பில், 05.09.19 வியாழக்கிழமை காலை 11 மணியளவில், பழைய வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோவில் தெருவில் அமைந்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில் “ஆசிரியர் தின விழா” வெகு கோலகலமாக பள்ளியின் உள் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் பேசுகையில், ” நல்லாசிரியை” விருது பெற்ற தலைமையாசிரியை திருமதி D. கலா சாந்தகுமாரி அவர்களது பணியினை பாராட்டினார்.

மேலும் இந்த பள்ளியின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மற்றும் இராயபுரம் ஹெரிடே ஜ் அரிமா சங்கமும் செய்யும் என்று பலத்த கரவோசங்களுக்கிடையே தெரிவித்தார். தொடர்ந்து பேசிய போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான” செயல் சிங்கம்” திரு. Ln C. பாலகிருஷ்ணன் அவர்கள், இத்தகைய சிறப்புடன் இயங்கி வரும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை பெருமக்களை பாராட்டுவதாக தெரிவித்தார்.

திரு. Ln அருள்ரபி, ( Region Chairman), அவர்கள் பேசுகையில், ” இது போன்ற சிறப்பான விழாவினை பார்ப்பதற்கு சந்தோஷப்படுவதாக குறிப்பிட்டார்.

திரு.B. கார்த்திகேயன்( சென்னை மாவட்ட இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் PPFA, செய்தியாளர், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ்) அவர்கள் பேசுகையில், நல்லதொரு மாணவ சமுதாயம் உருவாக்குவதில் முழுமையான பங்கு வகிக்கும் இப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த ஆசிரியர் தின வாழ்த்தை பலத்த கைத்தட்டல் மூலம் தெரிவியுங்கள் என கேட்ட போது அரங்கமே அதிர்ந்தது நிஜம்.

திரு. Ln. A. செல்வம்( மாநில செயற்குழு உறுப்பினர் PPFA) அவர்கள் பேசுகையில், மாதா, பிதா, குரு தெய்வம் இந்த வரிசையில் உங்களுக்கெல்லாம் குருவாக திகழ்ந்திடும் ஆசிரியை வழி காட்டுதலில் நடைபோடுங்கள் சிறந்த குடிமகனாக வருவீர்கள் என்றார்.

ஆசிரியைகளை கெளரவப்படித்திடும் விதமாக பங்கு பெற்ற திரு. Ln. C.H. சண்முகம் அவர்களும், ( President, Lions Club of Royapuram Heritage) தன் துணைவியார் திருமதி. S. பரிமளா அவர்களுடன் வருகைத் தந்து வாழ்த்தினார்.

திரு. MJF Ln A. வீரப்பன் ( மாநில செயற்குழு உறுப்பினர், PPFA) அவர்கள் பேசுகையில்,கடந்த 15 வருடங்களுக்கு முன் எங்களது அரிமா சங்கம் பல்வேறு உதவிகளை செய்ததை நினைவு கூர்ந்தார்.

மேலும் இந்நிகழ்வில் திரு. Ln. M.D. சஞ்சீவி ( Treasurer, Lions club Royapuram Heritage) திரு. Ln. T.S. பாலாஜி ( மாநில துணை பொதுச் செயலாளர், PPFA) திரு. ” ஜீனியஸ்” K. சங்கர்,(தலைமை நிலைய செயலாளர், PPFA) திரு. P K. மோகனசுந்தரம் ( கண்காணிப்பு குழு செயலாளர், PPFA) அவர்கள், திரு.அ. மதன் (வட சென்னை மாவட்ட ( கி) தலைவர் அவர்கள் கலந்துக் கொண்டு அப்பள்ளி ஆசிரியர்களை கெளரவப்படுத்தினர்.

இந்நிகழ்வினை சிறப்பான வகையில் குறைந்த நேரத்தில் ஏற்பாடு செய்த போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி மற்றும் இராயபுரம் ஹெரிடேஜ் அரிமா சங்கம் நிர்வாகிகளுக்கும், அப் பள்ளி ஆசிரியை பெருமக்களும் நிஜமாக பாராட்டுகளுக்கும், பெருமைக்கும் உரியவர்களே…

ஒளிப்பதிவு: “ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு: அமுரா

Check Also

தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி செலவை குறைத்து கணக்கிடப்பட்டது எப்படி? – தமிழக அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்வி செலவுத் தொகை எப்படி குறைத்து கணக்கிடப்பட்டது என …