உட்கட்சி தேர்தலில் முறைகேடு: பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்

கர்நாடக அதிமுக உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக தொடரப்பட்ட வழக்கில், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உள்கட்சி தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி, கர்நாடக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் செல்வராஜ் உள்பட 35 பேர் பெங்களூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா, வரும் 26ம் தேதிக்குள், இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதே போல், உள்கட்சி தேர்தல் முறைகேடுகள் குறித்து கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் விளக்கம் அளிக்க நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Check Also

அதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். …