“கடல் பறவைகள் தொண்ணூறு சதவீதமானவற்றின் வயிற்றில் பிளாஸ்டிக்”

உலகின் கடல் பறவைகளில் தொண்ணூறு சதவீதமானற்றின் வயிற்றுக்குள் சிறிதளவிலாவது பிளாஸ்டிக் இருக்கும் என்று நம்புவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அரை நூற்றாண்டாக தாங்கள் நடத்திய பல ஆய்வுகளை வைத்து தாம் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தக் காலப்பகுதியில் கடலில் சேர்ந்துவிட்ட பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களின் அளவு வருடத்துக்கு எட்டு மில்லியன் டன்கள் என்ற அளவாக அதிகரித்துவிட்டது என ஒரு மதிப்பீடு கூறுகிறது.

சிறு பிளாஸ்டிக்குகளை  மீண் முட்டை என்று தவறாக நினைத்து உண்டுவிடுகின்றன என்றும் அவை வயிற்றுக்குள் தங்கினால் அந்தப் பறவையின் உயிருக்கே உலை வைக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

Check Also

ஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் …