காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காய்ச்சல் குணமாக ஊசி போட வேண்டாம், மருத்துவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுமாறு என்று பொதுமக்களுக்கு தமிழக பொது சுகாகாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், காய்ச்சல் சீக்கிரம் சரியாக சில மருத்துவர்களும், பெரும்பாலான போலி மருத்துவர்களும் ஸ்டெராய்டு,  டைக்லோபினாக், பாராசிட்டமால் ஊசிகளை போடுகிறார்கள். ஸ்டெராய்டு ஊசி போடுவதால் காய்ச்சலின் காரணம் சரியாகாது. ஸ்டெராய்டு ஊசியால் காய்ச்சல் அப்போது குறையுமே தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். டைக்லோபினாக் காய்ச்சல் மருந்து கிடையாது அது வலி நிவாரணி. இந்த ஊசிகளை காய்ச்சலுக்கு போட்டால் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் டைக்லோபினாக், ஸ்டெராய்டை காய்ச்சலுக்கு ஊசியாகவோ, மாத்திரையாகவோ எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பாரசிட்டமால் காய்ச்சல் மருந்து தான். அதை மாத்திரையாக உட்கொள்ளலாம். ஆனால் ஊசியாக போட்டால் வலி தான் அதிகம். இதனால் உடலில் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும். காய்ச்சலுக்காக மருத்துவர்களிடன் சென்றால் அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரை, மருந்துகளை மட்டும் பெற்று சாப்பிடுங்கள். மருந்து, மாத்திரை சாப்பிட்டும் காய்ச்சல் குறையாவிட்டால் மிதமான வெந்நீரில் துணியை நனைத்து நெற்றி, முகம், கை, கால்கள் என உடல் முழுக்க துடைத்தால் காய்ச்சல் விரைவில் குறையும். மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து காய்ச்சலுக்கு தேவையில்லாத ஊசிகளை போடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்,

Check Also

தொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்

இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *