சமத்துவ மக்கள் கட்சி – அதிமுக கூட்டணி தொடரும்: சரத்குமார்

வரும் சட்டசபை தேர்தலிலும், அதிமுக-வுடன் கூட்டணி தொடரும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அக் கட்சியின் தலைவர் சரத்குமார் கொடியேற்றி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

பின்னர் கட்சி நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மதுவிலக்கை தமிழகத்தில் படிபடியாகத்தான் அமல்படுத்த முடியும் என குறிப்பிட்ட சரத்குமார், கட்சி தொண்டர்கள் மது உள்ளிட்ட போதை பொருள்கள் உபயோகிப்பதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மது அருந்த மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Check Also

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு அதிமுக கவுன்சிலர் பட்டப்பகலில் படுகொலை

சென்னை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திரு. எம். குரு. அவர் இன்று மதியம் 1 மணியளவில் அம்பத்தூர் …