சீனாவில் இரசாயன ஆலையில் வெடிப்பு

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷாண்டொங் மாகாணத்தில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு ஒன்று நடந்ததாக சீன ஊடகங்கள் கூறியுள்ளன.

ஷிபோ நகருக்கு அருகே அந்த இடத்தில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன.

5 கிலோமீட்டர்கள் தூரம் வரை அந்த வெடிப்பு உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

வெடிப்பை அடுத்து உருவான தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடுகின்றனர்.

பாதிப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

Check Also

ஜப்பான் பாதுகாப்பு மசோதாவுக்கு சீனா கடும் கண்டனம்

ராணுவத்துக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் மசோதாவை ஜப்பான் நிறைவேற்றியிருப்பது பிராந்திய ஒற்றுமையைக் குலைக்கும் செயல் என சீனா கருத்து தெரிவித்துள்ளது. ஜப்பான் …