சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார்.

சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். 
இந்த போட்டியில் அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் 9.80 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தையும் ட்ரேவான் பிரம்மால்,ஆன்ட்ரே டி கிராஸ்சஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். 

Check Also

பெய்ஜிங்கில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு

இரண்டாம் உலகப் போரின் 70 வது நினைவு தினத்தில், முதல் முறையாக சீனா தனது ராணுவத்தின் 80 சதவிகித ஆற்றலை …