சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி தமாகா சார்பில் ஆர்ப்பாட்டம்

சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைக்கக் கோரி, தமாகா சார்பில் இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை 50 சதவீதமாக குறைப்பதுடன், காலாவதியான சட்டத்துக்கு புறம்பாக இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி தமாகா சார்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையரகம் பூட்டு போடும் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Check Also

சென்னை சென்ட்ரலில் ரயிலை மறியல் போராட்டம்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. …