சென்னை, வேளச்சேரியில் இரவில் தொடர் மின்வெட்டு: மக்கள் கொந்தளிப்பு

சென்னையை அடுத்த வேளச்சேரியில் தொடர் மின்வெட்டை கண்டித்து, மின்துறை அலுவலகத்தை பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்டனர்.

சென்னை முழுவதும் வெயில் கடந்த ஒரு வாரமாக வறுத்தெடுத்து வருகிறது. இதனால் மக்கள் புழுக்கத்தில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையை அடுத்த வேளச்சேரியில், ராஜலெட்சுமி நகர், தண்டீஸ்வரம், கஜநாதபுரம், பேபி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் மின்வெட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவும் மின் தடை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அருகில் இருந்த மின் துறை அலுவலகத்தை நள்ளிரவு 12 மணி அளவில் முற்றுகையிட்டனர். மேலும் அங்கிருந்த ஊழியரிடமும் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஊழியர்கள், அலட்சியமாக பதில் அளிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Check Also

சென்னையில் நேற்றிரவு கன மழை

சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. …