சோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ!

சோனி டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

ஏனெனில் முதல் இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியை வென்றவர் தமிழ்ப் பெண் அஞ்சனா. பெங்களூரில் வசிக்கும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல வெற்றி பெறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அனன்யா ஸ்ரீதம் நந்தா வெற்றி

ananyaஆனால் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் அனன்யா ஸ்ரீதம் நந்தா என்கிற ஒடிஷாவைச் சேர்ந்த 14 வயது பெண் முதலிடம் பெற்றார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மேலும் சோனி டிவியுடன் ஒரு ஒப்பந்தமும் யுனிவர்சல் மியூசிக் குரூப்பின் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது தொடர்பான மற்றொரு ஒப்பந்தமும் கிடைத்தன.

13 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் அனன்யா(ஒடிஷா), நித்யஸ்ரீ மற்றும் நகித் அப்ரின் (அஸ்ஸாம்) ஆகிய மூன்று பெண்கள் இறுதிப் போட்டிக்குத் தேர்வானார்கள்.

Check Also

கமல் நடிக்கும் “தூங்காவனம்” திரைப்பட டிரெய்லர் வெளியீடு

கமல்ஹாசன் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவர உள்ள தூங்காவனம் திரைபடத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில், கமல்ஹாசன், திரிஷா …