தமிழகத்துக்கு காவிரி நீர் தர முடியாது, கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல் திட்டவட்டம்

கர்நாடக அணைகளில் தண்ணீர் குறைந்து வருவதால் இந்த ஆண்டு தமிழகத்துடன் காவிரி நீரைப் பகிர்ந்துகொள்ள முடியாது என கர்நாடக அமைச்சர் எம்.பி.பட்டீல்   தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பட்டீல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்து விட்டதாகக் கூறினார்.

கர்நாடகம் கடும் வறட்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், கர்நாடக அணைகளில் உள்ள காவிரிநீரை குடிநீர் தேவைகளுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி. பட்டீல் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் சட்டப்படி தமிழகத்திற்கு பகிர்தளிக்க வேண்டிய நீரைக் கூட பகிர்ந்தளிக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக எம்.பி.பட்டீல் தெரிவித்தார். போதிய மழைப் பொழிவு இருந்தால் மட்டுமே இந்த முடிவில் மாற்றம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Check Also

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு விஜயகாந்த் குற்றச்சாட்டு

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் …