திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,  3 மனிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை 4 மணிக்கு கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்தி வழியாக கொண்டுவரப்பட்டு அதிகாலை 5.15 மணிக்கு கோவில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் ஆவணித் திருவிழாவிற்கான கொடியினை ஏற்றினர். தொடாந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரமாகி காலை 6.20 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

Check Also

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் சர்ச் கட்ட ஒரு தரப்பினர் எதிர்ப்பால் பதட்டம்!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஜெ.பி. கோயில் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கிறிஸ்துவ கோயில் முழுவதும் தரைமட்டமாக்கி புதியதொரு ஆலயம் …