தெற்கு ரெயில்வேயில் பகல் கொள்ளை…

உங்கள் பார்வைக்கு…
இன்று காலை குடும்பத்துடன் திருவள்ளூரிலிருந்து சென்னை திரும்ப ரயில் நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு வாங்கும் போது காலை 9-58மணி. ரயில் புறப்படும் நேரம் காலை 10 மணி. நாம் சீட்டினை பெற்றுக் கொண்டு செல்வதற்குள் ரயில் புறப்பட்டு விட அடுத்த ரயிலுக்கு காத்திருந்த போது அடுத்த ரயில் அரக்கோணத்திலிருந்து வருகின்ற போதே மக்கள் நெருக்கத்தில் நிரம்பி வழிந்ததால் அடுத்த ரயிலில் செல்ல முடிவு செய்தோம்.

கிட்டத்தட்ட 11-15 மணி வரை ரயில்கள் ஏதும் திருவள்ளூர் நிலையத்திலிருந்து புறப்படவில்லை. ஆனால் பயணச்சீட்டுகளை தொடர்ந்து வழங்கி கொண்டிருந்தனர். பொறுமை இழந்த நாம் விசாரித்ததில் பராமரிப்பு பணியினால் வழக்கமாக செல்லும் ரயில்கள் ரத்து, நாளிதழ்களில் விளம்பரம் செய்திருந்தோம் படிக்கவில்லையா எனக் கேட்டனர்.

இதனால் டென்ஷனாகி ரெயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம் கோபமாக பேசவும் பயணச் சீட்டுக்கான பணத்தை கவுண்டரில் பெற்றுக் கொள்ள சொன்னவரிடம் அதற்கு ஒப்புகை சீட்டு கேட்க தர மறுத்தவர் போங்க தருவாங்கன்னு சொல்ல மறுபடியும் கவுண்டரில் வந்து கேட்க இந்த பயணச்சீட்டை நா தரலை என அங்கிருந்த நான்கு பேர் சொல்ல நாம் ஏகத்துக்கும் டென்ஷன் ஆனோம்.

இதில் வேதனை என்னவெனில் ஓடாத ரயிலுக்கு தொடர்ந்து பயணச்சீட்டு கொடுத்துக் கொண்டிருந்தது தான் அந்த வகையில் ரூ. 20000/- வசூல் ஆகியிருக்கும். நாம் விடாது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நமது பயணத் தொகை ரூ. 130 கிடைத்தது. ஆனால் தொடா் வசூல் செய்து ரயில் இல்லாது, பணத்தையும் பறி கொடுத்த பயணிகள் இதற்காக சண்டை போட மனமில்லாமல் ஸ்டேஷன் வெளியில் காத்திருந்த ஆட்டோக்களில் பஸ் ஸ்டாண்ட் நோக்கி செனறனர்.

இதற்கிடையில் நமது அதிரடி வாக்குவாதம் காரணமாக சென்னை நோக்கி செல்லும் விரைவு வண்டியில் ஏறி பயணம் செய்யுங்கள். இந்த பயணச்சீட்டு செல்லும் என அன்புடன் (?)வழியனுப்பினர்.
நாம் கேட்பது இது தான் விளம்பரம் தந்தோம் என நம்மை கேள்வி கேட்கும் ரயில் நிர்வாகம் ஓடாத ரயில்களுக்கு தொடர்ந்து பயணச்சீட்டு தருவது ஏன்.?

அதற்கு ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட நேரம் வரை ரயில்கள் ஓடாது என்பதால் பயணச்சீட்டு தரப்பட மாட்டாது என அறிவிப்பை எழுதி ஒட்டியிருந்தால் குடும்ப சகிதமாக வருபவர்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வார்கள் அல்லவா…?

சிறப்பான சேவையினை தர நினைக்கும் தெற்கு ரயில்வே இனி இது போன்ற சங்கடங்ளை பயணிகளுக்கு தர மாட்டார்கள் என நம்புகின்றோம்.

ஈ. மகேஷ்வரன், செய்தியாளர்
ஜீனியஸ் ரிப்போர்ட்டர் (தமிழ் மாத இதழ்)

Check Also

நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய இரத்த தான முகாமில் PPFA

நண்பர்கள் நகர நல அமைப்பு நடத்திய மாபெரும் இரத்த தான முகாம் ஸ்டான்லி மருத்துவ குழுவினர் உதவியுடன், 02.10.2019 புதன்கிழமை …