நெஞ்சம் நிறைந்த விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில அமைப்பு செயலாளர் திரு. Dr.Ln N. ரவி- திருமதி. சரஸ்வதி ரவி அவர்களது 40 ஆம் ஆண்டு திருமண விழா மற்றும் மலர் வெளியீட்டு விழா போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் மற்றும் ஜீனியஸ் டீவி சார்பில் சென்னை களாரியன் ஓட்டலில் 24.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள் தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் கெளரவ ஆசிரியருமான ” செயல் சிங்கம்” Ln. C. பாலகிருஷ்ணன் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட மாண்புமிகு நீதியரசர் திரு. T.N. வள்ளிநாயகம் அவர்கள் 40 ஆம் ஆண்டு மலரினை வெளியிட்டு சிறப்பு உரையாற்றினார். நுங்கம்பாக்கம் காவல்நிலைய சரகத்தின் உதவி ஆணையாளர் திரு. P. முத்துவேல்பாண்டி, காவல்துறை அதிகாரிகள், நுங்கம்பாக்கம் பகுதி வாழ் பிரமுகர்கள், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில, மாவட்ட இளைஞர், மகளிர் அணி நிர்வாகிகள், ஜீனியஸ் டீம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

ஒளிப்பதிவு: ” ஜீனியஸ்” K. சங்கர்
படத்தொகுப்பு: அமுரா.

Check Also

பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் …