புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

புதுக்கோட்டையைச் சேர்ந்த 16 மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். நேற்று நள்ளிரவு யாழ்ப்பாணத்திற்கு, நெடுந்தீவுக்கும் இடையே உள்ள நயினார் தீவு என்ற இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். காங்கேசன் துறை காவல்துறையிடம், புதுக்கோட்டை மீனவர்களை, இலங்கை கடற்படையினர் ஒப்படைக்க போவதாகவும், அதன் பின்னர், தமிழக மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Check Also

பிரபாகரன் தற்கொலை செய்துதான் இறந்தார்: கருணா பரபரப்பு

இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை …