மீண்டும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினர் கைது

சேலம் அருகே பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சசிபெருமாள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

பூரண மது விலக்கு குறித்த அறிவிப்பை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே வெளியிட வலியுறுத்தி மறைந்த காந்திய வாதி சசிபெருமாள் குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற கூட்ட தொடர் முடியும் வரை போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். சேலம் மாவட்டம் சித்தர் கோவில் காந்தி சிலை அருகே இன்று காலை முதல் சசிபெருமாளின் மகன்கள் உட்பட 6 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Check Also

சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது: ஈ.வி.கே.எஸ்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தமிழக …