“விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விருதை வென்றுள்ளது

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விசாரணை’ திரைப்படம் வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் பெருமைமிகு விருதை வென்றுள்ளது.

வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்படம் ஒன்று, விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்திய அளவிலும், தமிழக அளவிலும் திரைப்படங்கள் பல வெனீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தாலும், இதுவரை எந்தப் படமும் விருது பெறவில்லை.

தனுஷின் “வுண்டர்பார் ஃபிலிம்’ நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் “கிராஸ் ரூட் ஃபிலிம்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய “லாக் அப்’ என்ற நாவலின் தழுவலாக உருவாகியுள்ளது.

72-ஆவது வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடும் பிரிவில் கலந்து கொண்ட இந்தப் படம், விருதுக்கான போட்டி பிரிவுக்குத் தேர்வு செய்யப்பட்டது.

இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற விருது அறிவிப்பு விழாவில் மனித உரிமைகள் பற்றிய சினிமா பிரிவில் விருதுக்கான படமாக அறிவிக்கப்பட்டது. படத்தில் நடித்துள்ள அட்டகத்தி தினேஷ், சமுத்திரகனி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டனர். ஆனந்தி,சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் விரைவில் தமிழகம் முழுவதும் வெளியிடவுள்ளது.

Check Also

கமல் நடிக்கும் “தூங்காவனம்” திரைப்பட டிரெய்லர் வெளியீடு

கமல்ஹாசன் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவர உள்ள தூங்காவனம் திரைபடத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில், கமல்ஹாசன், திரிஷா …