ஷாப்பிங் வித் ரவுடி! 6 டெல்லி போலீஸ் பணியிடை நீக்கம்

ரவுடி மனோஜ் பக்கர்வாலாவை டெல்லி போலீசார் கடந்த 27ம் தேதி திகார் சிறையில் இருந்து ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதன் பிறகு திகார் சிறைக்கு வரும் வழியில் தனக்கு ஷூ வாங்க கடைக்கு அழைத்துச் செல்லுமாறும், அவ்வாறு அழைத்துச் சென்றால் போலீசாருக்கும் ஷூ வாங்கிக் கொடுப்பதாகவும் மனோஜ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துணை சப் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் மனோஜுடன் ஷாப்பிங் சென்றுள்ளனர். போலீசார் கைதியுடன் ஷாப்பிங் வந்ததை பார்த்த கடைக்காரர் தனது பத்திரிக்கை நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவம் கேமராவில் வீடியோ எடுக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் கைதியை ஷாப்பிங் அழைத்துச் சென்ற 6 போலீசாரையும் வேலையை விட்டு நீக்கி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Check Also

திருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு …