ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர். குடிமை பாதுகாப்பு அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

மெக்காவிலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ள மினாவில் ஹஜ் புனித யாத்திரையில், பக்ரீத் பெருநாளில் சுமார் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
இந்தக் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 220 பேர் பலியானதாகவும், 450 பேர் காயமடைந்திருப்பதாகவும் குடிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

 ஈத் உல் அல்ஹா என்ற தியாகத் திருநாளின் முதல்நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு 1,400 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Check Also

உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்

உலகிலேயே முதல் முறையாக ரஷ்ய கணிப்பொறி விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை வரும் 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ளது. …