ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், கடந்த 24–ந் தேதி பக்ரீத் பண்டிகையின்போது லட்சக்கணக்கானோர் கூடி, மினா நகரில் சாத்தான் சுவர் மீது கல்வீசினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 750க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், இந்த விபத்தில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது 74 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஹஜ் கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க, மத்திய இணையமைச்சர் வி.கே. சிங் சவுதி சென்றுள்ளார்.

Check Also

கண்டெய்னர் லாரி விபத்து, வாலிபர் கால் முறிவு…

19-06-19 காலை 11 மணியளவில் இராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையிலிருந்து, சூரியநாராயண செட்டி தெருவிற்கு திரும்ப வேகமாக வந்த கண்டெய்னர் …