அட்லாண்டிக் பெருங்கடலை நீந்திக் கடக்க முயற்சி

அட்லாண்டிக் பெருங்கடலை நீந்திக் கடக்க பலர் முயற்சித்திருந்தாலும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முழுமையாக யாரும் அதை இதுவரை நீந்திக் கடந்தது இல்லை.

அப்படியான சாதனையை பிரிட்டனைச் சேர்ந்த பென் ஹூப்பர் முன்னெடுக்கவுள்ளார்.

மேற்கு ஆப்ரிக்க நாடான செனிகலின் தலைநகர் டாக்காரிலிருந்து தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்கு கடற்கரை நகரான நடாலுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் அவர் நீந்தவுள்ளார்.

இடைப்பட்ட தூரமான சுமார் 3500 கிலோமீட்டர்களை அவர் 120 நாட்களில் நீந்தத் திட்டமிட்டுள்ளார்.

தினமும் இரண்டு தவணைகள் அவர் நீந்தவுள்ளார். இடையே சிறிது நேரம் ஓய்வெடுப்பார் என்றும், இரவு நேரங்களில் அவருடன் துணையாகச் செல்லும் படகில் உறங்குவார் என்றும் ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

அறக்கட்டளைக்கு உதவும் நோக்கிலேயே இந்த நீச்சல் முயற்சியை தான் முன்னெடுத்துள்ளதாக பென் ஹூப்பர் தெரிவித்தார்.

Check Also

குவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….

மத்திய கிழ‌க்கு நாடான குவைத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக …