அதிகம் கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு வாய்ப்பும், பக்கவாதம் அதிகம் -ஆய்வறிக்கை

ஒருவர் தன் நிதானத்தை இழப்பதால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் பாதிக்கப்படும் ஆபாயம் அதிகரிக்கும் என்று அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒருவருக்கு கடுங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகவும், பக்கவாதம் ஏற்ப்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாகவும் ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் பொது சுகாதார பிரிவின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

ஆயிரக்கணக்கான நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒருவர் தன் வாழ்நாளில் எந்த அளவு இந்த மாதிரி அதிகம் கோபப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் அவர் பாதிக்கப்படுவார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு இந்த நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அமைதியாகுவதற்கு உதவும் வகையில் மருந்துகளோடு சேர்த்து, உளவியல் சிகிச்சைகளும் அளிப்பது இவ்வகையான தாக்குதல்களை குறைப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

Check Also

இயற்கை மருத்துவம்-பிரம்ம தண்டு

இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *