அமெரிக்காவில் சீக்கியர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் சீக்கியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

சிகாகோ நகரைச் சேர்ந்தவர் இந்தர்ஜித் சிங் முக்கர். சீக்கியரான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை, அங்குள்ள கடை ஒன்றை நோக்கி தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது, அவருடைய காரை வழிமறிக்கும் வகையில் மற்றொரு கார் குறுக்கீடு செய்தது. அவருக்கு வழிவிடுவதற்காக, முக்கர் தனது காரை நிறுத்தினார். அப்போது, குறுக்கீடு செய்த நபர் தனது காரிலிருந்து இறங்கி முக்கரை சரமாரியாகத் தாக்கினார்.

அவரை நோக்கி “பயங்கரவாதி பின்லேடனே, உனது நாட்டுக்கு திரும்பிச் சென்றுவிடு’ என்று தாக்குதல் நடத்திய நபர் குரலெழுப்பினார்.

இந்தத் திடீர் தாக்குதலால் பலத்த காயமடைந்த முக்கர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து பின்னர் முக்கர் கூறுகையில், “மதம் சார்ந்த கொள்கைகளைக் கடைபிடிப்பதில் அமெரிக்கர் யாரும் அச்சம் கொள்ளக்கூடாது’ என்றார். இதனிடையே, முக்கரைத் தாக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …