ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு

விண்ணில் உள்ள கிரகங்களை ஆய்வு செய்தவதற்காக தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்ணில் உள்ள கிரகங்கள் பற்றி, ஆஸ்ட்ரோ சாட் செயற்கை கோள் ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ள இஸ்ரோ, ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோளுடன், இந்தோனேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் 6 செயற்கைக் கோள்களும் சேர்த்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-30 ராக்கெட் மூலம் ஆஸ்ட்ரோ சாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Check Also

மங்கள்யான் எடுத்த செவ்வாய்க் கிரகத்தின் புதிய படத்தை வெளியிட்டது இஸ்ரோ(ISRO)

மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்தப் படம், 1,857 …