இடைத்தேர்தல்: ஜார்கண்டில் காங்கிரஸ் வெற்றி, குஜராத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி!

குஜராத் மாநிலம் ஜஸ்டான் தொகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலம் கொலேபிரா தொகுதி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது.

குஜராத் ஜஸ்டான் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மாறாக ஜார்கண்ட் கொலேபிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். குஜராத்தின் ராஜ்கோட் அருகே ஜஸ்டான் மற்றும் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

குஜராத்தின் ஜஸ்டான் தொகுதியில் கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குன்வாராஜித் பாவாலியா போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவர் கடந்த ஜூலை மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவிற்கு சென்றார். இந்த தொகுதி காலியானதான் காரணமாக அங்கு இடைத்தேர்தல் நடந்தது.

ஜார்கண்ட் தேர்தல் ஏன்

அதேபோல் ஜார்கண்ட்டில் உள்ள கொலேபிரா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜார்கண்ட் கட்சியை சேர்ந்த ஈனாஸ் எக்கா, கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றார்.இதனால் இவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து இங்கு தற்போது இடைத்தேர்தல் நடந்தது.

இங்கு காங்கிரஸ், பாஜக, ஜார்கண்ட் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது. கடந்த 20ம் தேதி அங்கு இடைதேர்தல் நடந்தது.

குஜராத் வலுவான வேட்பாளர் குஜராத்தின் ஜஸ்டான் தொகுதியில் பாஜக, காங்கிரசில் இருந்து கட்சி மாறிய குன்வாராஜித் பாவாலியாவை அந்த தொகுதியில் தனது வேட்பாளராக நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி அவ்சார் நகியா என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

குன்வாராஜித் பாவாலியா அங்கு 4 முறை தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றத்திற்கு தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜார்கண்ட் கொலேபிரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரசின் விக்சால் கொங்காடி 9658 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Check Also

தொழில் முதலீடு செய்ய சிறந்த மாநிலம் குஜராத், தமிழகத்திற்கு 12 ம் இடம்

இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் குஜராத் உள்ளதாக உலக வங்கி அறிக்கையில் …