இந்தியர்களுக்கு வாட்ஸ்அப் மேலும் சில ஆண்டுகள் இலவசம்

இந்தியாவில் கிட்டத்தட்ட  7 கோடி பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை ஒரு வருடத்திற்கு மட்டுமே அதன் பயன்பாட்டை இலவசமாக வழங்கிவந்தது .அதன் பின் ஒரு பயனாளருக்கு 1 அமெரிக்க டாலர் பயன்பாட்டு கட்டணமாக  வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது .

இந்நிலையில் அந்நிறுவனத்தின் தொழில் வளர்ச்சி துறை  துணைத்தலைவர் நீராஜ்  அரோர  இந்தியாவில் என்னும் சில ஆண்டுகள் வாட்ஸ்அப் பயன்பாட்டை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இந்தியாவில் கிரெட்டி கார்டுகள் அதிகம் பயன்படுத்துவது இல்லை என்பதை எங்கள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. ஒரு சேவைக்காக பணம் செலுத்துவது பலருக்கும் விருப்பம் இல்லை . சேவையை புதுப்பிக்க நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.61 வசூலிக்கும். ஆனால் இந்தியர்களுக்காக சில ஆண்டுகள்  நிறுவனம் சேவையை  இலவசமாக வழங்கும் என்று தெரிவித்தார்.

Check Also

ஆப்பிள் ஐபோன் அன்று முதல் இன்று வரை அதன் 7 வருட விளம்பரங்கள்

ஐபோன் அன்று முதல் இன்று வரை அதன் 7 வருட விளம்பரங்கள் Post Views: 188

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *