உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ உலகின் அதிசயம்

உலகிலேயே முதல் முறையாக ரஷ்ய கணிப்பொறி விஞ்ஞானிக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை வரும் 2017ம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோ நோவ், இவர் கணிப்பொறி விஞ்ஞானி ஆவார். இவர் வெர்டிங் ஹோப்மான் என்ற மரபணு திசுக்கள் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார். இந்நோய் குறித்து பல மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி வந்தார். ஆலோசனைகளின் முடிவில் இவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்.

Valery_Spiridinov_3340495bஇதனை அவரும் ஏற்றுக்கொண்டார். மேலும் இதனை தொடர்ந்து இத்தாலி உள்ள நரம்பியல் நிபுணர் டாக்டர் செர்ஜியோ கேனவெரோவும், சீன அறுவை சிகிச்சை நிபுணர் ரென்ஸியோடாங்கும் இணைந்து இந்த அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர்.

இந்த அறுவை சிகிச்சை 36 மணி நேரத்திற்கும் மேல் நடக்கும் எனத் தெரிகிறது.

சீனாவின் ஹார்பின் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வரும் 2017ம் ஆண்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உலகிலேயே முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நபர் என்ற பெருமையை கணிப்பொறி விஞ்ஞானி வலேரி ஸ்பைரி டோநோவ் பெறுகிறார்.

Check Also

ஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு

ஹஜ் புனித பயணத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. சவுதி …