காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு விஜயகாந்த் குற்றச்சாட்டு

காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், உதகை படகு இல்லம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்கு விரைவில் தீர்வு கண்டறிய வேண்டியது அவசியமாகும் என்றும் விஜயகாந்த் தெரிவித்தார்.

மேலும், காவிரி பிரச்சனையை வைத்து தமிழக அரசும் கர்நாடக அரசும் அரசியல் செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …