சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடு விவரங்கள்

தமிழக அரசு சார்பில், சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த விவரங்கள்.

கிண்டி கத்திப்பாராவில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில் அமைந்துள்ள வர்த்தக மையத்தின் முதல் நுழைவாயிலில் இருந்து அங்குள்ள முதலாவது மற்றும் இரண்டாவது அறைக்கு செல்லலாம்.

அடுத்து அங்கிருந்து கூட்ட அரங்கிற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அந்த மையத்தின் பின்பகுதியில், மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் அருகே உணவுக் கூடம் அமைந்துள்ளது.

அதையொட்டி மாநாட்டு பிரதிநிதிகள் மற்றும் கண்காட்சி அமைப்பாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தக மையத்தின் வலதுபுறத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரின் வாகனங்கள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்க விழா நிகழ்ச்சி:

7

மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சி காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் வரவேற்புரை ஆற்றுகிறார். இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளைச் சேர்ந்த குழுவில் உள்ள ஒருவர், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றுகிறார். முதல்வர் ஜெயலலிதா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிப் பேசுகிறார். தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.வி.சங்கர் நன்றி தெரிவிக்கிறார்.

25 கருத்தரங்குகள்:

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும், பிற்பகலில் இருந்து கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 2 மணிக்கு கருத்தரங்குகள் தொடங்குகின்றன. மொத்தம் எட்டு அரங்குகளில் வெவ்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நிகழ உள்ளன. மாலை 6 மணி முதல் 8 மணி வரை தமிழகத்தின் பெருமையைப் பறைசாற்றும் கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

முதல் நாள் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இரண்டாம் நாள் காலையிலேயே கருத்தரங்குகள் நிகழ உள்ளன. காலை 9.30 மணிக்கு கருத்தரங்குகள் தொடங்கி, 11.30 மணி வரை நடைபெறுகின்றன. அவையும் எட்டுத் தலைப்புகளில் நிகழ உள்ளன. நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் கருத்தரங்குகள், மாலை 3.15 மணி வரை நடக்கவுள்ளன.

நிறைவு நிகழ்ச்சி:

மாநாட்டின் நிறைவு நாள் விழா, வரும் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. அதில், முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

Check Also

தேமுதிக யாருடன் கூட்டணி? விஜயகாந்த் பதில்

தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் …