சிவகங்கை அருகே தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு

சிவகங்கை அருகே மிக தொன்மையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சங்க காலத்தில் ரோமானியர்களுடன் வர்த்தகம் செய்துவந்த நகரம் என மத்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ளது கீழடி கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் அகழாய்வானது கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இங்கு சுமார் 3 இடங்களில் ஒவ்வொரு இஞ்ச் அளவிலும் ஆய்வு மேற்கொண்டதில் முதலாம் நூற்றாண்டினை சேர்ந்த அரியவகை பொருட்களும் அதற்கான சுவடுகளும் கிடைத்துள்ளன.

ரோமானியர்கள் பயன்படுத்திய அகலமான செங்கல்கற்களால் கட்டப்பட்ட சுவர்கள், சுட்ட மண்பாண்ட பொருட்கள், மண்பாண்டத்திலான உரைகிணறுகள், பழுங்கி கற்கல் மற்றும் விலங்குகளின் எழும்புகளால் தயாரிக்கப்பட்ட அனிகலன்கள் அகழ்வாரய்ச்சி பணியின் போது கிடைத்துள்ளன. இங்கு கிடைத்த ரோமானியர்களின் மண்பாண்ட எச்சங்களை வைத்து கணக்கிட்டால் சங்க காலத்தில் இந்த நகரம் மிகபெரிய வணிக நகரமாக விளங்கியிருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த காலத்தில் ரோமானியர்களுடன் வணிகம் புரிந்ததற்கான ஆதாரங்கள் இதன் மூலம் உறுதியாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத இறுதிவரை நடைபெறும் ஆய்வில் இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கபெறலாம் என்றும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டால் சங்க காலம் குறித்து முழுவதுமாக அறிந்துகொள்ள முடியும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர்.

சங்க காலத்திலும் நம் முன்னோர்கள் வணிகத்திலும், கலை மற்றும் நாகரிகத்திலும் சிறந்து உலகம் போற்றும் விதமாக வாழ்ந்துள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

Check Also

முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: முதலமைச்சர் ஜெயலலிதா

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்திற்கு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் …