சூரிய ஒளி மின் திட்டத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும்: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

நடப்பாண்டு இறுதிக்குள் சூரிய மின்னுற்பத்தி திட்டங்களில் தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழும் என மாநில மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மரபுசாரா எரிசக்தி ஆராய்ச்சி மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என தென்காசி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சரத்குமார் இன்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மேலும் கூறியதாவது:- சூரிய ஒளி மின்சக்தியை நவீன முறையில் செயல்படுத்த அரசு அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

சீனா, கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள சூரிய மின் உற்பத்தி முறை குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தமிழகம் இந்தாண்டு இறுதிக்குள் சூரிய ஒளி மின் திட்டத்தில் முதன்மை மாநிலமாக திகழும் என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார்.

Check Also

கிண்டி தொழிற்பேட்டையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி தொழில்வளாகம் : முதல்வர் ஜெயலலிதா

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், 1958-ஆம் ஆண்டில் கிண்டி தொழிற்பேட்டை முதன்முதலாக தமிழக …