தென் கொரியா – வட கொரியா போர் மூலும் சூழல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொரிய நாடுகளின் எல்லையில் நீடிக்கும் போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில், ராணுவத்தினர் இல்லாத ஒரு இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.

தென் கொரியா தனது எல்லையில் ஒலிபெருக்கிகளை வைத்து கம்யூனிஸத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதற்கு வட கொரியா காலக்கெடு விதித்திருந்தது.

அந்தக் காலக்கெடு துவங்குவதற்கு முன்பாகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கின்றன.

தென்கொரிய அரசு, காலக்கெடுவுக்குள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால் தாக்குதல் நடத்தப்படும் என வட கொரியா கூறியிருந்தது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …