நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன்

பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தனது மனைவி பெயரை அறிவித்ததன் பின்னணியில் காஞ்சி காமாட்சியம்மன் கோவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நரேந்திர மோடி தனது வேட்பு மனுவில் மனைவியின் பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டார். இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் தனது மனைவியின் பெயரை மோடி அறிவிக்க காரணம் என்ன? என்று விசாரிக்கும் போது காஞ்சி காமாட்சியம்மன் உத்தரவினாலேயே மோடி தனது மனைவியின் பெயரை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தசமஹா வித்யா ஹோமம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மார்ச் 14-ம் தேதி உலக நன்மை வேண்டி தச மஹா வித்யா ஹோமம் தொடங்கியது. மார்ச் 23-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. இதில் பாஜக தேசியச் செயலாளர் முரளிதர ராவ், தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மோடிக்கு பிரசாரம்

யாகம் முடிந்த பின்னர் பிரசாதத்தை கோயில் பிரதான அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி எடுத்துக்கொண்டு மார்ச் 26ம் தேதி டெல்லியில் உள்ள மோடியை சந்தித்து கொடுத்தார். காமாட்சியம்மன் பட்டுப்புடவை அந்த பிரசாதத்தில் காஞ்சிபுரம் காமாட்சியம்மனின் பட்டுப் புடவையும் இருந்துள்ளது. பட்டுப் புடவையை கொண்டு சென்ற நடராஜ சாஸ்திரி, ”இந்தப் புடவையை உங்கள் மனைவியிடம் கொடுங்கள்” என்று மோடியிடம் கூறினாராம்.

அம்பாளின் உத்தரவு

சற்று மௌனம் காத்து பின்னர் வியந்துபோய் நரேந்திர மோடி பிரசாதத்தை பெற்றுக்கொண்டாராம். அம்பாள் பக்தரான நரேந்திர மோடி, காமாட்சியம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதையும், அதை அவரது மனைவியிடம் கொடுக்குமாறு கூறியதையும் காமாட்சியம்மனின் உத்தரவாக எடுத்துக்கொண்டார் என்கிறார்கள்.

வேட்பு மனுவில் சொன்ன மோடி

அதன் பிறகே வேட்புமனு தாக்கலின்போது, தனது மனைவி யின் பெயரை குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து கருத்து கூறியுள்ள நடராஜ சாஸ்திரி, நரேந்திர மோடியை சந்தித்ததும், அவருக்கு அம்மனின் பட்டுப் புடவை வழங்கப்பட்டதும் உண்மை. இதன் பின்னரே அவருக்கு மனமாற்றம் ஏற்பட்டு மனைவி பெயரைத் தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி பிரச்சனை செய்யும்

ஆனால், இது ஒரு பக்கம் இருந்தாலும் நரேந்திர மோடிக்கு மனைவி இருப்பதை அவர் மறைத்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி பிரச்சனை செய்து வந்ததும், இதை அவர் தெரிவிக்காவிட்டால் சட்டரீதியில் சிக்கலை ஏற்படுத்தி பிரதமர் கனவுக்கு முட்டுக்கட்டை போடுவார்கள் என்றும் சட்ட நிபுணர்கள் தந்த ஆலோசனையும் இதன் பின்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Check Also

அத்திவரதர் வைபவம்! மக்களை தடுமாற வைத்த நிர்வாகம்!

இதோ குளத்திலிருந்து 40 வருடங்களுக்கு பின் எழுந்தருளிய காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முடிவுக்கு வந்த நிலையில், காஞ்சிக்கு சென்று தரிசிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *