பத்திரிகையாளர்களின் பாதுகாவலர் என்றும் நம்நினைவில் வாழும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களின் நினைவேந்தல்

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் தலைவர், அகில இந்திய பத்திரிகையாளர் சங்க துணைத் தலைவர், தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் உறுப்பினர் என தன் வாழ்நாள் இறுதி வரை பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு அரணாக இருந்தவரும், எளிமையான மனிதராக நம் நினைவுகளில் மறையாமல் வாழ்ந்து வரும் D.S. ரவீந்திரதாஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஜீனியஸ் ரிப்போட்டர் மற்றும் ஜீனியஸ் டிவி யின் சார்பாக சென்னை ராயபுரத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில அமைப்புச் செயலாளருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்கள், அலங்கரிக்கப்பட்ட ஐயாவின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந் நிகழ்வில், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் உதவி நிர்வாக ஆசிரியரும், தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் வட சென்னை மாவட்ட பொருளாளருமான திரு. I. கேசவன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் சிறப்பாசிரியர் ” கிங் மேக்கர்” திரு. B. செல்வம், பொறுப்பாசிரியர் ” ஆன்மீகம்” திரு. I. நாகராஜன், துணை ஆசிரியர் திரு.Ln L. வேலாயுதம், புகைப்படக் கலைஞர் திரு.V. கந்தவேல், செய்தியாளர்கள் திரு.B. லட்சுமி நாராயணன், திரு. சங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.‌

இந்நிகழ்வு பற்றி நம்மிடம் பேசிய முதன்மை ஆசிரியர் அவர்கள், ஐயாவின் திருக்கரங்களால் 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ம் தேதி நமது “ஜீனியஸ் ரிப்போர்ட்டர்” தமிழ் மாத இதழினை ஆசிர்வதித்து துவக்கி வைத்தது நமக்கெல்லாம் பெருமையான நிகழ்வு. இதனை நம்மால் மறுக்கவும் இயலாது என்பதே நிஜம். மேலும் நாம் நடத்திய விழாவில் எந்த வித ஆரவாரமின்றி வந்து கலந்துக் கொண்டு நம்மை வாழ்த்தியது மட்டுமல்லாமல் நமது போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற ” முப்பெரும் விழா” விலும் கலந்துக் கொண்டது மட்டுமல்லாது நாம் அழைப்பிதழ் தராமல் விட்டாலும் வருகைத் தந்து நம்மை பெருமைப்படுத்தியவர் ஐயா அவர்கள்.

2012 ஆம் ஆண்டில் இதே நாளில் நம்மை விட்டு மறைந்தது நமக்கு மட்டுமல்ல பத்திரிக்கை துறைக்கே பேரிழப்பு தான். பத்திரிகையாளராக, போராட்ட குணங்கொண்ட போராளியாக, எளிமையாக நடந்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய ஐயாவின் வழியில் அவர் கண்ட கனவை பத்திரிகையாளர்களாக ஒற்றுமையுடன் இணைந்து ஐயாவின் புதல்வரும், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும், 77890|தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட் மாநில தலைவரும் எனது அன்பு சகோதரருமான திரு. D.S.R. சுபாஷ் அவர்களின் கரத்தை பலப்படுத்த வட சென்னை மாவட்ட சார்பாகவும், மாநில அமைப்புச் செயலாளர் என்ற வகையில் பணியாற்றுவோம் என இந்நாளில் சூளுரைப்போம்‌ என கூறினார்.

ஒளிப்பதிவு :
V.கந்தவேல்
படத்தொகுப்பு:
V.மோகன்
செய்தியாக்கம்:
” ஜீனியஸ்”K. சங்கர்

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …