​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற சுயேட்சை உறுப்பினர் ரஷீத் என்பவர், நேற்று மாலை தனது நண்பர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து அளித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று எதிரொலித்தது. ரஷீத்தை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக தேசிய மாநாட்டு கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தின் போது ரஷீத்தை, பாஜக எம்எல்ஏ ரவீந்தர் ரெய்னா தாக்கினார். அதனை கண்டித்து தேசிய மாநாட்டு கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே ரஷீத் மீதான தாக்குதலுக்கு காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது கண்டனம் தெரிவித்துள்ளார்.

Check Also

பிஜேபி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…

பாரதிய ஜனதா கட்சி சார்பில் ம.பொ.சி. அவர்களின் 116 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இவ்விழாவில் பாரதிய …