5 தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் தூக்கு தண்டனை

தமிழ்நாட்டு மீனவர்கள் 5 பேருக்கு இலங்கையில் தூக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஹெராயின் கடத்தியதாக 2011-ல் வழக்கு தொடரப்பட்டது. கடத்தல் வழக்கில் தமிழக மீனவர்கள் 5 பேர், இலங்கை மீனவர்கள் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீனவர்கள் 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ராமேஸ்வரத்தில் இருந்து 2011ஆம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி காலை 712 விசைப்படகுகளில் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த கிளாடுவின் படகில் சென்ற மீனவர்கள் எமர்சன், பிரசாந்த், வின்சென்ட், அகஸ்டீஸ், போல்டேத் ஆகியோரை சிறை பிடித்து சென்றனர்.

அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறை பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நெடுந்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்க்கப்பட்டு பின்னர் அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தி வந்ததாக ஊர்காவல்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தூக்கு தண்டனை விதிப்பால் ராமேஸ்வரம் வட்டார மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நவம்பர் 14-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Check Also

காசிமேட்டில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு காவல்துறை அதிகாரிகள் அறிவுரை

‌மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் முடிவடைந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் மீன்பிடிக்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *