லாரி வேலைநிறுத்தம் வாபஸ்:பேச்சுவார்த்தையில் உடன்பாடு

மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக டெல்லியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்ததையில், லாரி உரிமையாளர்கள் மற்றும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், சுங்கச்சாவடிகள் மற்றும சுங்கக் கட்டணங்களை முறைப்படுத்துவது தொடர்பாக குழு ஒன்றை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் குழுவில்,  அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் தலா இரண்டு பேரும்,   மத்திய அரசு சார்பில் இரண்டு பேரும் இடம்பெறுவர். இந்த குழுவினர் நடத்தும் ஆய்வின் அடிப்படையில், பிரச்சனைக்கு வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் தீர்வு காணவும் உடன்பாடு எட்டப்பட்டது.
இதையடுத்து, 5 நாள்களாக நீடித்து வந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றுள் கொள்வதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Check Also

தனியார் பள்ளி சார்பாக குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு…

தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள் 5 லட்சம் பேர் குடும்பத்துடன் பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு …