நடிகை அமலா பால், இயக்குனர் விஜய் திருமணம் நடந்தது

இயக்குனர் விஜய் – அமலா பால் திருமணம் இன்று காலை சென்னையில் நடந்தது.

தெய்வத் திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் விஜய்க்கும் அமலா பாலுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

கடந்த ஜூன் 7-ம் தேதி விஜய் – அமலா பால் திருமண நிச்சயதார்த்தம் கொச்சியில் நடந்தது. அமலா பால் கிறிஸ்தவர் என்பதால், அவர்கள் முறைப்படி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அதைத்தொடர்ந்து இன்று (12-06-2014) இந்து முறைப்படி இருவருக்கும் சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

மணமகள் அமலா பாலை நிற்க வைத்து கழுத்தில் தாலி கட்டினார் விஜய். நிகழ்ச்சியில் இயக்குனர்கள் மணிரத்னம், பாலா, ஆர் சுந்தரராஜன். பொன்வண்ணன், ஜெயம் ராஜா, நடிகர்கள் விக்ரம், ஆர்யா, விஜய் மனைவி சங்கீதா, சரண்யா பொன்வண்ணன், கிரேஸி மோகன், ஜிவி பிரகாஷ், சைந்தவி, ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எடிட்டர் மோகன், உள்பட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர். மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

Check Also

கமல் நடிக்கும் “தூங்காவனம்” திரைப்பட டிரெய்லர் வெளியீடு

கமல்ஹாசன் மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவர உள்ள தூங்காவனம் திரைபடத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில், கமல்ஹாசன், திரிஷா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *