கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசு தலைமை ஆசிரியை பாராட்டு…

74 ஆம் ஆண்டு இந்திய தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பழைய வண்ணை, சஞ்சீவிராயன் தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளியில், இந்திய தேசிய கொடியினை தண்டையார் பேட்டை H3 காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு பாலசுப்பிரமணியம் அவர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், கொரோனா பாதிப்பில் இருந்த மக்களுக்கு களப்பணியில் சிறப்புடன் களப்பணிபுரிந்த இராயபுரம், தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தின் சார்பில் அலுவலர்களுக்கும், காவல்துறை சார்பில் உதவி ஆய்வாளர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், வீடு வீடாக சென்று மக்கள் நலனுக்கு களப் பணியாற்றியவர்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் பள்ளி தலைமை ஆசிரியை திருமதி சாந்திகலா அவர்கள் பரிசுகள் வழங்கி, பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” திரு. B. செல்வம்

Check Also

“ஸ்வச் பாரத்” திட்டத்தை செயல்படுத்தும் PPFA

கடந்த 2019 அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு, பிரதமர் மோடி அவர்கள் கடந்த வருடம் “ஸ்வச் …