சென்னை திருவொற்றியூரில் BJP வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை….

சென்னை திருவொற்றியூரில் பாரதிய ஜனதா கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணியினர் மக்கள் நலனுக்காக கூட்டுபிரார்தனை நடத்தினர்.

சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் பாரதிய ஜனதா கட்சி வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கிருஸ்ணகுமார் வழிகாட்டுதலின்படி வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி பி.வசந்தமாலா தலைமையில் மக்கள் நலனுக்காக கந்த சஷ்டி கவசம் பாடி கூட்டுப்பிரார்த்தனை செய்து கொரோனா நிவாரணமாக நலிந்த மகளிர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள், முககவசம் வழங்கினர்.

இந்நிகழ்வில் வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திருவொற்றியூர் மண்டல் நிர்வாகிகள் மற்றும் அன்ன செல்வி, ஈஸ்வரி தீனா, கலைமதி, ஷோபனா, அன்னம்மாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Check Also

மகப்பேறு கால விடுமுறை 3 மாதத்திலிருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு

மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் …