அரசியல்

அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தாக்கப்பட்டார் – அரசியலில் நல்லவர்கள் அடிமேல் அடி வாங்குவார்களோ?

டெல்லி சுல்தான்புரியில் கேஜ்ரிவால் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருந்த அவரது கன்னத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் எதிர்பாராதவிதமாக அறைந்தார். அவரும் ஆம் ஆத்மி தொப்பி அணிந்திருந்தார் உடனடியாக அந்த நபரை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து தாக்கினர். பின்பு அந்த நபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். சம்பவத்திற்குப் பின்னர் பாஜகவை கடுமையாக விமர்சித்த கேஜ்ரிவால், பிரதமர் பதவியை அடைய ஏன் சிலர் வன்முறையை கடைபிடிக்கிறார்கள் என தெரியவில்லை. …

மேலும் படிக்க

நீலகிரி பாஜக வேட்பாளர் வேட்புமனு தள்ளுபடி வழக்கு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து பாஜக வேட்பாளர் குருமூர்த்தி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. நீலகிரி தொகுதியில் குருமூர்த்தி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய வேட்பும னுவும் மாற்று வேட்பாளர் மனுவும் நேற்று அதிரடியாக தள்ளுபடி செய்யப்பட்டன. இவர்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் என்பதற்கான கடிதத்தைக் கொடுக்கவில்லை என்பதால் வேட்புமனுக்கள் தள்ளுபடியானதாக கூறப்பட்டது. …

மேலும் படிக்க

இந்த தேர்தல் தனது கடைசி தேர்தலாக கூட இருக்கலாம் – திமுக தலைவர் கருணாநிதியின் உருக்கமான பேச்சு

கோவையில் நேற்றிரவு நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, தமிழன் தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கூறிய கருணாநிதி, கடுமையான எதிர்ப்பு இருந்தால் மோடி மட்டுமல்ல யாரும் இங்கு நுழையமுடியாது என்று அவர் குறிப்பிட்டார். ஆளும்கட்சி என்ற பெயரில் ஜெயலலிதாவும் ஏமாற்றுவதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். இளைஞர்கள் உறுதியுடன் இருந்தால் இந்திமொழி இங்கு நுழையமுடியாது என கூறிய அவர் தமிழர்களின் பண்பாட்டை காக்க உயிரை கொடுத்து உழைப்போம் …

மேலும் படிக்க

ஒரு புயல் வந்து கொண்டிருக்கிறது (A Storm is Coming) – ஆம் ஆத்மி பார்ட்டி

A Storm is Coming , புரட்சி ஆரம்ம்பித்துவிட்டது என்ற பெயரில் ஆம் ஆத்மி பார்ட்டி ஆதரவாளர்களால் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொகுப்பு

மேலும் படிக்க

குஜராத் அரசு இரட்டை வேடம் போடுகிறதா? காஸ் (Gas) விலையை உயர்த்த கோரி எழுதிய கடிதம் – ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட,  காஸ்(Gas) விலையை உயர்த்தக் கோரி குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ஃப்ரேஷன் லிமிட்டெட் (Gujarat State Petroleum Corporation Limited) எழுதிய கடிதத்தின் நகல். இது பற்றி அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பிய போது எவரும் பொருத்தமான பதிலை தரவில்லை என்பது அக்கட்சியின் கூற்று.

மேலும் படிக்க

மோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு கூட்டத்தில் அவர் பேசிய போது, நான் தெருவில் உள்ளவன், என் மக்களுக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். நான் சாவைக் கண்டு என்றும் பயந்ததில்லை. மோடி இந்த மாநிலத்தை குஜராத்தாக கருதுகிறார். குஜராத்தில் 4 சதவிகித …

மேலும் படிக்க

ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில், சுமார் 3 ,300 ஏக்கர் – கோர்ட்டில் அரசு வக்கீல் பவானி சிங்

தற்போது நடைபெற்றுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான  சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, மற்றும் உறவினர்கள் பெயர்களில்,   சுமார் 3 ,300 ஏக்கர் வரை நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் அரசு வக்கீல் பவானிசிங் கூறினார். முன்பு முதல்வராக இருந்த காலத்தில் ஜெயலலிதா, சொத்துக் குவித்ததாக தி.மு.க. ஆட்சி காலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஒரு வார காலமாக …

மேலும் படிக்க

மத்திய மந்திரியை செருப்பால் அடியுங்கள் என்று கூறிய அதிமுக வேட்பாளர் மீது புகார்

தேர்தல் வாக்கு கேட்டு உங்கள் தொகுதிக்கு ப. சிதம்பரம் வந்தால் அவரை செருப்பால் அடியுங்கள் என்று மக்களிடம் தெரிவித்த அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2014ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் மானாமதுரை அருகே  நேற்று மாலை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் வாக்கு கேட்டு உங்கள் பகுதிக்கு வந்தால் …

மேலும் படிக்க

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று புது தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் * 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை 3 வருடங்களில் எட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையாக்கப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் * தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட …

மேலும் படிக்க

மு.க. அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் – கருணாநிதி

திமுகவின் கொள்கைகளுக்கு விரோதமான முறையில் செயல்பட்ட மு.க. அழகிரி சில நாட்களுக்கு முன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரிடம் விளக்கமும் கோரப்பட்டது. ஆனால் எந்த வித விளக்கமும் தராமல் கட்சி தலைமையை மீண்டும் விமர்சித்ததால் மு.க. அழகிரி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க