உலகம்

செயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய மந்திரி

காணாமல் போய் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370. ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 1588 மைல் தொலைவில், பிரெஞ்ச் செயற்கைகோள் படத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் 122 பொருட்கள் கடலில் மிதப்பதாகவும் அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஸ்கமுதின் உசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மாயமான விமானத்தில் பயணம் …

மேலும் படிக்க

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து விட்டது – மலேசிய பிரதமர்

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நாஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். லண்டனின் இன்மர்சாட் செய்தி நிறுவனம் கொடுத்துள்ள தகவல்களை வைத்து பார்க்கும் போது, விமானம் கடைசியாக தென்பட்டது ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்துக்கு மேற்கே இருக்கின்ற கடற்பரப்பில் தான் என்றும், அது அங்கு தான் காணாமல் போய் விட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை …

மேலும் படிக்க

வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம்: சௌதியில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை

சௌதி அரேபியாவில் இருக்கின்ற இந்தியக் குடிமக்களை அங்கே வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரித்திருக்கிறது. அங்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் சௌதி அரேபிய நிர்வாகத்தால் கைதுசெய்யப்படுகின்ற அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்ற நிலைமையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று இந்திய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சௌதி தலைநகர் ரியாத்தில் மருத்துவமனைத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தியப் பெண்கள் சிலர், கடந்த ஒன்பது மாத காலமாக தனக்கு சம்பளம் தரப்படவில்லை எனக் கூறி …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத் தேடுதல் வேட்டை: பல புதிய பொருட்களை சீன விமானம் கண்டது

காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த சீன விமானம் ஒன்று இந்திய பெருங்கடலில் பல அடையாளம் தெரியாத பொருட்களை கண்டுபிடித்துள்ளதாக சீன செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், அது காணாமல் போயிருக்கலாம் என்று கருதப்படும் ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில், இந்த சதுர வடிவ வெள்ளை பொருட்கள் மிதந்ததாக செய்தி நிறுவனமான ஷின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்தப் …

மேலும் படிக்க

மலேசிய விமானம்: இந்தியப் பெருங்கடலின் தெற்கே மிதப்பவை காணாமல்போன விமானத்தின் பாகங்களா?

காணாமல் போன மலேசிய விமானம் MH-370ஐத் தேடும் பணி இன்னும் ஓயவில்லை, இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் தொலைதூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு விமானங்கள் விமான பாகங்களைத் தேடிவருகின்றனர். இந்த விமாத்தின் பாகம் எதுவும் மிதப்பதைக் கண்டதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. ஆனால் தற்போது தேடப்படும் பகுதியில் சில பொருட்கள் மிதப்பதை பிரான்ஸ் செயற்கைக்கோளிலிருந்து எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் காட்டுவதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் வீட்டில் சோதனை

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியன் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர். கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா மற்றும் பரிக் அப்துல் ஹமித் ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர். அந்த விமானிகளின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோநிலை ஆகியவைகள் குறித்து ஆராய இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது. இந்தச் …

மேலும் படிக்க

விமானத்தை கடத்தியிருக்கலாம்? மலேசியன் பிரதமர் ரஸாக்

மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் கடந்த வாரம் மலேசியாவிலிருந்து சீனாவிற்கு சென்றபோது மலேசியா- வியட்நாம் பகுதியில்  காணாமல் போனது. இந்த விமானம் குறித்து இதுவரை எந்த தகவல்களும் வரவில்லை. எனவே உலகின் அனைத்து பகுதிகளிலும் விமானம் தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் இன்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் “காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் 14 நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை இப்பணியில் …

மேலும் படிக்க

ட்வெண்டி 20 உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், அகான் கலைநிகழ்ச்சி

வங்கதேசத் தலைநகரில் நாளை மறு நாள் நடக்கும் ட்வெண்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில்      ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த விழாவில் புகழ்பெற்ற ராப் பாடகர் அகானும் (Akon) கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி டாக்காவின் பங்காபந்து மைதானத்தில் தொடங்குகிறது. விழா தொடர்பாக ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்ததில் தான் மிகவும் …

மேலும் படிக்க

உக்ரைன் நெருக்கடி: அமெரிக்க ரஷ்ய அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை

உக்ரைனில் உருவாகியுள்ள நெருக்கடியைத் தணிக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் ஜான் கெர்ரியும், ரஷ்ய வெளியுறவுத்துறைச் செயலர் செர்கெய் லவ்ரொவ்வும் லண்டனில் சந்திக்கவுள்ளனர். க்ரைமீயா பகுதி உக்ரெய்னிலிருந்து பிரிந்து ரஷ்யாவுடன் சேர வேண்டுமா என்பது பற்றி அப்பகுதி மக்களிடையே வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அமெரிக்க ரஷ்ய அமைச்சர்கள் நேருக்கு நேர் சந்தித்து விவாதிப்பதற்கான கடைசி சந்தர்ப்பம் இதுதான். அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடுகளும், உக்ரைனில் ரஷ்யத் …

மேலும் படிக்க

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம்: அமெரிக்கா!

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போன  பின்பும் கிட்டதட்ட நான்கு மணிநேரம் விண்ணில் பறந்துள்ளதால் அதை யாராவது கடத்தி, ரகசியமான இடத்தில் மறைத்து வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் கருதுகிறார்கள். கடந்த சனிக்கிழமை மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு சென்ற விமானம் மாயமானது. அதில் பெரும்பாலான பயணிகள் சீனர்கள். அந்த விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன ஆனது என்பதை அறிய அவர்களின் குடும்பத்தார் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் விமானம் …

மேலும் படிக்க