உலகம்

அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலையின்போது நிருபர், ஒளிப்பதிவாளர் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது புகுந்த மர்ம நபர் அங்கிருந்த நிருபர், ஒளிப்பதிவாளரை சுட்டுக் கொன்றார். இந்தப் படுகொலைக் காட்சி நேரலையில் ஒளிபரப்பாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய நபரை போலீஸார் துரத்தியதை அடுத்து அவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு இறந்தார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரவோனாகேவில் டபிள்யுடிபிஜே7 (WDBJ7 )என்ற செய்தி சானல் இயங்குகிறது. இங்கு பணியாற்றி வந்த ஆலிசன் பார்க்கர்(24), ஒளிப்பதிவாளர் …

மேலும் படிக்க

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம். தென் கிழக்கு நேபாளத்தைத் தாக்கியது

நேபாளத்தின் தென் கிழக்கில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட சேத விவரம் குறித்த விவரம் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சீர்குலைந்தன. இந்த நிலையில் இன்று மிதமான நிலநடுக்கம் நேபாளத்தைத் தாக்கியது. கோடாரி எனும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க

சீனாவில் இரசாயன ஆலையில் வெடிப்பு

சீனாவின் கிழக்கு மாகாணமான ஷாண்டொங் மாகாணத்தில் உள்ள இரசாயன ஆலை ஒன்றில் வெடிப்பு ஒன்று நடந்ததாக சீன ஊடகங்கள் கூறியுள்ளன. ஷிபோ நகருக்கு அருகே அந்த இடத்தில் இருந்து புகை வந்துகொண்டிருப்பதை தொலைக்காட்சி படங்கள் காண்பித்தன. 5 கிலோமீட்டர்கள் தூரம் வரை அந்த வெடிப்பு உணரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. வெடிப்பை அடுத்து உருவான தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடுகின்றனர். பாதிப்பு குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

மேலும் படிக்க

உலக தடகள சாம்பியன் போட்டிகள் பீஜிங்கில் நாளை துவக்கம்

மிகப் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகத் தடகளச் சாம்பியன் போட்டிகள் சனிக்கிழமை சீனத் தலைநகர் பீஜிங்கில் தொடங்குகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்ற போதிலும், இந்த ஆண்டு கூடுதல் பரபரப்பும் எதிர்பார்ப்புகளும் உள்ளன. உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை ஜமைக்காவின் உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது ஊக்க மருந்து பயன்படுத்தி, பரிசோதனையில் சிக்கி தடை விதிக்கப்பட்டிருந்த காலத்துக்கு பின்னர் …

மேலும் படிக்க

தென் கொரியா – வட கொரியா போர் மூலும் சூழல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொரிய நாடுகளின் எல்லையில் நீடிக்கும் போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில், ராணுவத்தினர் இல்லாத ஒரு இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. தென் கொரியா தனது எல்லையில் ஒலிபெருக்கிகளை வைத்து கம்யூனிஸத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதற்கு வட கொரியா காலக்கெடு விதித்திருந்தது. அந்தக் காலக்கெடு துவங்குவதற்கு முன்பாகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கின்றன. தென்கொரிய அரசு, காலக்கெடுவுக்குள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால் தாக்குதல் …

மேலும் படிக்க

நடுவானில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி

சுலோவாக்கியா நாட்டில் நடுவானில் இரு விமானங்கள் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். சுலோவாக்கிய நாட்டு விமானம் மேற்கு மாகாணத்தில் 40 பாராசூட் வீரர்களுடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது செக்குடியரசு நாட்டின் எல்லையில் கெமன் என்ற பகுதியில் நடுவானில் 1500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக L-410 டிவின் இன்ஜின் விமானத்துடன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த …

மேலும் படிக்க

எகிப்ப்தின் தலைநகர் கெய்ரோவில் குண்டுவெடிப்பு; 29 பேர் காயம்

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் வட பகுதியில் அமைந்திருக்கும் பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்தில், சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் 6 காவலர்கள் உட்பட 29 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின் சத்தமும் அதிர்வும் நகரின் பல பகுதிகளில் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமையன்று அதிகாலை 2 மணியளவில் இந்த குண்டு வெடித்தது. “காரில் வந்த ஒரு ஆள் இந்தக் கட்டடத்திற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு, பின்னால் வந்த மோட்டர் பைக்கில் ஏறிச்சென்றுவிட்டார். …

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றி

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றது.  இதையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க நல்லாட்சி மற்றும் கொள்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இந்நாட்டின் பெரும்பான்மை மக்களின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதோடு அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்க கூடிய புதிய நாடொன்றை உருவாக்குவதாக பிரதமர் …

மேலும் படிக்க

பாங்காக் இந்து கோவிலில் குண்டு வெடிப்பு, பலர் பலி

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மிகவும் பிரபலமான இராவன் இந்து ஆலயம் பெரிய குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் குறைந்தது 16 பேர் பலியானதுடன் பலர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சம்பவ இடத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார். குண்டு வெடிப்பு காரணமாக பீதியில் ஓடிய மக்கள் கூட்டத்தால், நகரின் முக்கிய சாலைகள் முடங்கியதுடன் அவசர சேவைகளுக்கு பெரிய தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள இந்த …

மேலும் படிக்க

முற்றிலும் மாறுபட்ட சூழலில் இம்முறை இலங்கைத் தேர்தல்

இலங்கையில் கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, இம்முறை தேர்தல் முற்றிலும் வேறுபட்ட சூழலில் நடப்பதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். ‘ஆயிரத்து நூறுக்கும் அதிகமான தேர்தல் கால சம்பவங்கள் பதிவாகியுள்ள போதிலும், கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது வன்முறைகள் மிகவும் குறைந்திருக்கின்றன’ என்று பெஃப்ரல் என்கின்ற சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பின் தலைமை இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கடந்த கால தேர்தல்களின்போது, அரச சொத்துக்களும் வளங்களும் அரசியல் தேவைகளுக்காக …

மேலும் படிக்க