உலகம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி அமெரிக்கர்?

இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக ரிச்சர்ட் வர்மா என்பவரின் பெயரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முன்மொழிந்துள்ளார். அவரது நியமனம் உறுதியாகும் என்றால், இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராக வர்மா ஆவார். வழக்கறிஞரான வர்மா அமெரிக்க ராஜாங்க அமைச்சில் பணியாற்றியுள்ளார். இந்திய ராஜீய அதிகாரி ஒருவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணின் தொடர்பில் விசா மோசடி செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டு சென்ற ஆண்டு நியூயார்க்கில் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இந்தியா அமெரிக்கா இடையிலான …

மேலும் படிக்க

ஸ்காட்லாந்து பிரிவினை வாக்கெடுப்பு தோல்வி: 55.30 % பேர் பிரிவினையை நிராகரித்தனர்

யுனைட்டட் கிங்டத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.30% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.70% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப் பிரதேசங்களில், டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் மட்டுமே ஸ்காட்லாந்து தனிநாடாக பிரிந்து செல்லவேண்டும் என்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக …

மேலும் படிக்க

ஸ்காட்லாந்து சுதந்திரம்: வாக்கெடுப்பு தொடங்கியது

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனி நாடாக பிரிவதற்கான பொது வாக்கெடுப்பு இன்று நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707-ல் பிரிட்டன் நாடு அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது. அதேபோன்று, ஸ்காட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கெடுப்பு நடத்த ஒப்புதல் …

மேலும் படிக்க

இந்தியப் பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டு பிடிப்பு:மாயமான மலேசிய விமானம் எம்.எச்.370ன் பாகங்களா?

கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் புறப்பட்ட எம்.எச்.370 என்ற மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ஆவுஸ்திரேலியாவின் தேடுதல் குழுவினர் இந்தியப் பெருங்கடலில் கடினமான 58 பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர். இது மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள்தானா என்பதை அறிய அந்த பொருட்களை ஆய்வுக்கு அனுப்பவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் லியோ டியாங் லாய் தெரிவித்துள்ளார். கடலில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 58 பொருட்களும் இந்தியப் பெருங்கடல் கடற்படுகையுடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை எனவேதான் …

மேலும் படிக்க

சீனாவின் முதல் விண்வெளி நிலையம் 2022ம் ஆண்டில் முடிவடையும்

சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2022ம் ஆண்டு நிறுவப்போவதாகக் கூறியிருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே, விண்வெளி நிலையம் அமைக்கும் வேலைகளைத் தொடங்கப்போவதாக சீன அதிகாரிகள் தெரிவித்திருந்தனர், ஆனால் இப்போது அவர்கள் இது குறித்த விவரமான கால அட்டவணையை வெளியிட்டிருக்கிறார்கள். புதிய விண் ஆய்வுக் கூடம் ஒன்று இரண்டாண்டுகளில் தொடங்கப்படும்; அதன் பின்னர் ராக்கெட்டுகள் மற்றும் பிற அமைப்புகள் உருவாக்கப்படும். சீன விண்வெளி வீரர்கள் ஏற்கனவே விண்வெளியில் கலன்களை பொருத்தும் …

மேலும் படிக்க

கனடா அருகே 160 வருடங்களுக்கு முன்பாக காணாமல்போன கப்பல் கண்டுபிடிப்பு

160 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆர்ட்டிக் கடல் பகுதியில் மறைந்துபோன இரண்டு பிரிட்டனின் ஆய்வுக் கப்பல்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கனடா நாட்டுப் பிரதமர் ஸ்டீஃபன் ஹார்ப்பர் தெரிவித்துள்ளார். “இரண்டு கப்பலில் எந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தெளிவாகவில்லை. ஆனால், இந்த இரண்டு கப்பல்களில் ஒன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்பது புகைப்படங்களின் மூலம் உறுதியாகியுள்ளது” என்று ஹார்ப்பர் கூறியிருக்கிறார். சர் ஜான் ஃப்ராங்க்ளின் 1845ஆம் வருடத்தில் கனடா நாட்டை ஒட்டியுள்ள ஆர்ட்டிக் பிரதேசத்தில் அட்லாண்டிக் …

மேலும் படிக்க

ஐபோன் 6, ஆப்பிள் வாட்ச் வெளியாகின: இந்தியாவில் செப்.26 முதல் விற்பனை

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளான ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ் மற்றும்  அப்பிள் வாட்ச் ஆகியன நேற்றிரவு வெளியிடப்பட்டன.கலிபோர்னியாவில் நடைபெற்ற  விழாவில் அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக் இவற்றை அறிமுகப்படுத்தினார். ஆசியாவின் இரண்டாவது பெரிய‌ வர்த்தகச் சந்தையான  இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன் 6- செப்டம்பர் 26ல் வெளி வர உள்ளது. இது குறித்து ஆப்பிளின் இந்திய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ஐபோன் 6 மற்றும் …

மேலும் படிக்க

யுக்ரைனில் ஏவுகணையால் விமானம் தாக்கப்பட்டுள்ளது – மலேசியப் பிரதமர்

யுக்ரைன் மீது பறந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைத்தான் ஹாலாந்து விசாரணை அறிக்கை காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். விமானம் விழுந்த இடத்தில் உள்ள எஞ்சிய உடல் பாகங்களை கண்டெடுக்க அந்தப் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் மலேசியக் குழுவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ரசாக் கேட்டுள்ளார். விமானம் ஏன் கிழே விழ்ந்தது என்பதையும் இந்தக் குழு …

மேலும் படிக்க

மறுபடியும் உலக அளவில் அவமானப்பட்டார் சுப்ரமணிய சுவாமி

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கானோர் பிஞ்சுக் குழந்தைகள் உட்பட சுமார் 2500 பேரை ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்தது. இந்த இனப்படுகொலைகள் தொடர்பான செய்திகளில் இந்தி  ‘ஷோலே’ திரைப்படக் காட்சிகளை அல்ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது என்று ஸ்கீர்ன்ஷாட் ஒன்றை சுப்ரமணிய சுவாமி சில நாட்களுக்கு முன்பு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டிருந்தார். அதில் இது  மஞ்சள் பத்திரிகைத்தனம் என அவர் குறிப்பிட்டுருந்தார். இது ஃபேஸ்புக்கில் படுவேகமாக பரவியது. …

மேலும் படிக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இதன் போது இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க