செய்திகள்

அஜித் படத்தலைப்பு “என்னை அறிந்தால்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி கொண்டிருக்கும் பெயரிடப்படாத திரைப்படம் கிட்டதட்ட 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையிலும் படத்தின் தலைப்பு மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு தலையைப் பிய்த்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் தான் படத்தின் தலைப்பு 30 அக்டோபர் அன்று வெளியாகும் என்று செய்திகள் வெளியாகின. அதன்படி அஜித் படைத்தலைப்பு அதிகாரப்பூர்வமாக …

மேலும் படிக்க

தாய்க்கு கோயில் கட்டும் நடிகர் ராகவா லாரன்ஸ்

நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். தற்போது ‘முனி 3 – கங்கா’ படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்து வருகிறார். அதோடு பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் தனது தாய்க்கு கோவில் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக தனது தந்தை ஊரான பூவிருந்தவல்லி அருகில் உள்ள மேவலூர் குப்பம் என்ற ஊரில் இடம் தேர்வு செய்துள்ளார். லாரன்ஸின் பிறந்த நாளான இன்று …

மேலும் படிக்க

கத்தி படம் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கடம்: டி.எஸ்.ஆர். சுபாஷ்

சமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரமணா‘  படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார். அதன்பின் வந்த ‘கஜினி‘ …

மேலும் படிக்க

கத்தி படம் இல்லை, பாடம்: நடிகர் விஜய்

கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் கத்தி பட வெற்றி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசும்போது விவசாயிகள் படும் துயரம் குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், படத்தில் நடிக்கும் போதுதான் இது படம் இல்லை, பாடம் என்பதைத் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். நிகழ்ச்சியில் இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் …

மேலும் படிக்க

ரஜினிக்கு சல்மான் கான் சவால்!

இந்திய பிரதமர் மோடி துவங்கி வைத்த ’தூய்மையான இந்தியா’ போட்டி நாடெங்கும் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. ஒரு போட்டியாளர் குப்பைகள் நிறைந்த பகுதியை சுத்தப்படுத்திவிட்டு, அடுத்த நபரை போட்டிக்கு அழைத்து சவால் விடவேண்டும் என்பது போட்டியின் விதிமுறையாகும். இதன் அடிப்படையில் நரேந்திர மோடி, சல்மான் கான் உள்ளிட்ட பலரையும் போட்டிக்கு அழைத்தார். போட்டியை ஏற்றுக்கொண்ட சல்மான் கான் குப்பையாக கிடந்த பகுதிகளை சுத்தம் செய்து, சில வீடுகளுக்கு வெள்ளையும் அடித்தார். தற்போது …

மேலும் படிக்க

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

பழம்பெரும் தமிழ் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளியன்று காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் பிரபலமடைந்த இவர், ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை போன்ற நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ளார். இலட்சிய நடிகர் என்று அவர் பிரபலமாக அறியப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் தமிழக அரசியலில் இருந்து செயல்பட்டார். பின்பு அரசியலிருந்து ஓய்வுபெற்ற அவர், …

மேலும் படிக்க

‘ஐ’ ஹிந்தி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் சில்வஸ்டர் ஸ்டாலன்

சங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஐ . சமீபத்தில் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்னால்ட் கலந்துகொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஐ படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ஹிந்தி இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்த முயற்சி செய்து வருகின்றனர். ஹிந்தி இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டம் தீட்டி வருகின்றனர். தமிழ் இசை வெளியீட்டு …

மேலும் படிக்க

87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் பரிந்துரை

87-ஆவது ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு இந்தியா சார்பில் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள “லயர்ஸ் டைஸ்’ என்ற ஹிந்தித் திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து டில்லியில், இந்தியத் திரைப்பட சம்மேளனத்தின் தலைமைச் செயலாளர் சுப்ரன் சென், பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 2015-ஆம் ஆண்டுக்கான 87-ஆவது ஆஸ்கர் விருதுக்கு, சிறந்த அயல்நாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் “லயர்ஸ் டைஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள …

மேலும் படிக்க

கத்தி படத்தின் தீம் மியுசிக் காப்பியா?

கத்தி படத்தின் போஸ்டர் ஆங்கில பத்திரிக்கையின் காப்பி என விமர்சனம் எழுந்தது நினைவிருக்கலாம், அதை தொடர்ந்து கத்தி படத்தின் தீம் மியூசிக்கும் காப்பி அடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கத்தி படத்தின் இசையமைப்பாளர் அனிருத். DVBBS & Tony Junior – Immortal என்ற ஆங்கில ஆல்பத்தில் இருந்து மியூசிக்கை எடுத்து, வேறு ஒரு இண்ஸ்ட்ரூமெண்டில் வாசித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரிஜினல் ட்யூனை அச்சு பிசகமால் பயன்படுத்தியுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

மேலும் படிக்க

‘ஐ’-யை முந்திய ‘கத்தி’

அனிருத் இசையில் வெளியாகியுள்ள ‘கத்தி’ திரைப்படத்தின் பாடல்கள், இந்திய அளவில் ஐ-டியூன்ஸ் தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அனிருத் இசையில் வெளிவந்த 5 திரைப்படங்களின் இசையும், வெளிவந்த நாளில் ஐ-டியூன்ஸில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன், ‘கத்தி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘லெட்ஸ் டேக் ஏ செல்ஃபி புள்ள’ பாடல் திருட்டுத்தனமாக வெளியானது. இது படக்குழுவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. நேற்று கத்தி …

மேலும் படிக்க