செய்திகள்

‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் அர்னால்டு பங்கேற்கிறார்

தீபாவளிக்கு வெளியாகவுள்ள, ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகருக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் ரவிச்சந்திரனுடன் இப்படத்தை இணைந்து தயாரிக்கும் ரமேஷ் பாபு, அமெரிக்காவில் உள்ள அர்னால்டு வீட்டில் அவரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். சென்னையில் செப்டம்பர் 15-ஆம் தேதி நடைபெறும் ‘ஐ’ இசை வெளியீடு நிகழ்ச்சியில் தாம் கலந்துகொள்வதாக, அவரிடம் அர்னால்டு கூறியுள்ளார். இதனை …

மேலும் படிக்க

‘காந்தி’ படத்தை இயக்கிய ரிச்சர்ட் அட்டன்பரோ காலமானார்

ஆஸ்கார் விருது பெற்ற புகழ் பெற்ற பிரிட்டிஷ் நடிகரும், இயக்குநருமான ரிச்சர்ட் அட்டன்பரோ ஞாயிறன்று மதியம் காலமானார். அவருக்கு வயது 90. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் மாடிப்படியில் தவறி விழுந்ததை அடுத்து, வீல் சேரில் இருந்தே இயங்கிக்கொண்டிருக்க வேண்டிய நிலையிலும் அவர் இருந்தார். சுமார் 60 வருடங்களாக திரைத்துறையில் நடிகர், இயக்குநர் என்ற பல்வேறு துறைகளில் பங்களிப்பைச் செய்தவர் …

மேலும் படிக்க

செக் மோசடி வழக்கு: டைரக்டர் சரண் கைது

காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., உள்பட பல்வேறு படங்களை இயக்கியவர் டைரக்டர் சரண். தற்போது இவர் ‘ஆயிரத்தில் இருவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இன்று காலை நெல்லை அருகே பைபாஸ் சாலையில் படப்பிடிப்பு நடந்தது. இதில் டைரக்டர் சரண் கலந்து கொண்டு படத்தின் காட்சிகள் குறித்து விளக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தை சேர்ந்த தனிப்படை போலீசார் வந்தனர். அவர்கள் ரூ.50 லட்சம் செக் …

மேலும் படிக்க

புலிப்பார்வை, கத்தி படத்திற்கு எதிர்ப்பு ஏன்?

சென்னையில் இன்று தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தின் முடிவில் “கத்தி, புலிப்பார்வை திரைப்படத்தை எதிர்ப்பது ஏன்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், புலிப் பார்வை புலிப் பார்வை அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலககுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம்.. அதேபோல் தமிழீழ விடுதலைப் …

மேலும் படிக்க

குறும்பட செலவில் எடுக்கப்பட்டு கோடியை வசூல் செய்த திரைப்படம்

கோடிகளை செலவு செய்து எடுக்கும் படங்களே இன்றைக்கு காலை வாரிவிடும் நிலையில் வெறும் லட்சங்களை கொண்டு தயாரான ஒரு படம் கோடி ரூபாய் வசூலை தொட்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்புக்கு பெயர் போன ராம்கோபால்வர்மா தான் இந்தப் படத்தை தயாரித்து இருக்கியிருக்கிறார். படத்தின் பெயர் ‘ஐஸ்கிரீம்’. நவ்தீவ், தேஜஸ்வி, சந்தீப்தி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க ஒரு பங்களாவிற்குள்ளே நடைபெறுவதுபோல் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் இரண்டு லட்சத்து …

மேலும் படிக்க

ஏ.ஆர் ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அமெரிக்கா பல்கலைகழகம்

இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைப்பள்ளியான பெர்க்லீ, வரும் அக்டோபர் 24-ஆம் தேதி அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைப்பள்ளி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். மேலும் வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதை நான் பெருமையாகக் கருதுகிறேன்’ …

மேலும் படிக்க

நிஜமாவே கல்யாணம் பண்ணிட்டாங்க “சரவணன்-மீனாட்சி” செந்தில் – ஸ்ரீஜா

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சரவணன் மீனாட்சி’ தொடரில்  சரவணனாக நடித்த செந்திலுக்கும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவுக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற்றதாக நேற்று செய்திகள் வெளியாயின. இதுகுறித்து செந்திலிடம் கேட்டபோது திருமணம் நடந்தது உண்மை தான் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : ”சரவணன் மீனாட்சி சீரியலில் நடிப்புக்காக நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். இதை நேரில் பார்த்த ஸ்ரீஜா குடும்பத்தினர் அப்போது அதனை விரும்பவில்லை. சீரியல் …

மேலும் படிக்க

உடற்பயிற்சியால் சல்மான் கானுக்கு நோய்?

சல்மான் கானுக்கு ஏதோ நோய் இருப்பதாக இணைய தளங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தி பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சல்மான்கான் இந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். இவரது படங்கள் ரூ. 100 கோடி முதல் 200 கோடி வரை வசூல் ஈட்டுகின்றன. ஒரு படத்துக்கு ரூ. 30 கோடி முதல் ரூ. 40 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சல்மான் கானுக்கு அதிக பெண் …

மேலும் படிக்க

ரஜினி நடிக்க மறுப்பு: எந்திரன் 2ம் பாகத்தில் அஜீத்?

எந்திரன் 2–ம் பாகம் படத்தில் ரஜினி நடிக்க மறுத்ததால் வேறு நடிகர் தேர்வு நடக்கிறது. அஜீத் பெயர் பலமாக அடிபடுகிறது என்கின்றனர். ரஜினி–ஷங்கர் கூட்டணியில் வந்து வெற்றி கரமாக ஓடிய படம் ‘எந்திரன்’ 2010–ல் இப்படம் ரிலீசானது வசூலிலும் சாதனை படைத்தது. இந்தி, தெலுங்கிலும் இது டப்பிங் செய்து வெளியிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை ‘எந்திரன்–2’ என்ற பெயரில் எடுக்க ஷங்கர் விருப்பமாக இருக்கிறார். இதன் …

மேலும் படிக்க

“லிங்கா” ரஜினியின் பிறந்த நாள் அன்று வெளியீடு

கோச்சடையான் படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லிங்கா திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். படத்தில் இரட்டை வேடங்களில்  நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்க்ஷி சின்காவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர். ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவின் மைசூர் பகுதி உள்பட பல இடங்களில் நடந்தது. படத்தின் படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி காந்தின் பிறந்த நாளான டிசம்பர் மாதம் …

மேலும் படிக்க