சினிமா

நடிகை சரண்யா மோகன் திருமணம் நடைபெற்றது!

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை சரண்யா மோகனின் திருமணம் கேரளாவின் ஆலப்புழாவில் நேற்று நடைபெற்றது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணனை அவர் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்கமாட்டேன் என்று சரண்யா கூறியுள்ளார்.

மேலும் படிக்க

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் திருமண நிச்சயதார்த்தம்!

இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் – அட்சயாவின் திருமண நிச்சயதார்த்தம் சென்னை தி பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

மேலும் படிக்க

சோனி டிவியின் இண்டியன் ஐடல் டைட்டில் வாய்ப்பை நழுவ விட்ட சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ!

சோனி டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் நித்யஸ்ரீ இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றவுடன் சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. ஏனெனில் முதல் இந்தியன் ஐடல் ஜூனியர் நிகழ்ச்சியை வென்றவர் தமிழ்ப் பெண் அஞ்சனா. பெங்களூரில் வசிக்கும் இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இந்தியன் ஐடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதலிடம் பெற்றார். இதனால் இந்தமுறை நித்யஸ்ரீயும் அதேபோல …

மேலும் படிக்க

சிவகார்த்திகேயனின் “ரஜினிமுருகன்” டிரைலர்

சிவகார்த்திகேயனின் “ரஜினிமுருகன்” டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிக்க பொன்ராம் இயக்கியுள்ளார்.

மேலும் படிக்க

பாயும் புலி படம் நாளை வெளியாகிறது

பாயும் புலி உள்ளிட்ட அனைத்து படங்களும் 4-ம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு அறிவித்துள்ளார். திட்டமிடப்பட்டபடி பாயும் புலி படம் நாளை வெளியாகும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தன என்று நடிகர் விஷால், இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரும்அறிவித்துள்ளார்கள். விஷால், காஜல் அகர்வால் நடித்த ‘பாயும் புலி’ திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பான பிரச்னையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமரசம் ஏற்படாததால் வெள்ளிக்கிழமை முதல் படங்களை வெளியிடப் …

மேலும் படிக்க

அமிதாப் பச்சனின் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டது

பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. டிவிட்டர் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருபவர்களில் நடிகர் அமிதாப்பச்சனும் ஒருவர். இவரது டிவிட்டர் பக்கத்தினை சுமார் ஒன்றரை கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக மும்பை போலீசில் அமிதாப் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அமிதாப்பின் டிவிட்டர் பக்கம் சரி செய்யப்பட்டது. பின்னர் இந்த சம்பவம் குறித்து …

மேலும் படிக்க

இஞ்சி இடுப்பழகி டீஸர்!

இஞ்சி இடுப்பழகி படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். குண்டான ஒரு பெண்ணின் உடல் எடையைக் குறைக்க வைக்கும் கதையாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ஆஸ்காரில் காக்கா முட்டை

இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்பப்பட இருக்கும் படங்கள் குறித்த தேர்வு நடந்து வருகிறது. பிரபல தயாரிப்பாளரும், இயக்குனருமான அமோல் பாலேக்கர் தலைமையிலான குழு இதற்கான படங்களை தேர்வு செய்து வருகிறது. தென் இந்தியாவில் இருந்து பாகுபலி, காக்கா முட்டை ஆகிய படங்களை ஆஸ்கார் விருது போட்டிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதுபோலவே அமீர்கானின் பிகே, பிரியாங்கா சோப்ரா நடித்த மேரி ஹோம், நீராஜின் மாஸான் உள்பட பல்வேறு …

மேலும் படிக்க

பாயும் புலிக்கு தடை?

லிங்கா பட நஷ்ட ஈட்டை வேந்தர் மூவீஸ் தராவிட்டால், அந்த நிறுவனம் தயாரித்துள்ள பாயும்புலி படத்தை வெளியிடத் தடை விதிக்கப் போவதாக பன்னீர் செல்வம் தலைமையிலான திரையரங்க உரிமையாளர் சங்கம் திடீரென முடிவு செய்துள்ளது. லிங்கா தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு தலைமையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது. ரஜினியும் தனது அடுத்த பட வேலைகளைத் தொடங்கினார். இந்த சூழலில் லிங்காவின் வெளியீட்டாளரான வேந்தர் …

மேலும் படிக்க