சினிமா

நடிகர் சாந்தனு – கீர்த்தி திருமணம் நடைபெற்றது

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜின் மகன், நடிகர் சாந்தனு – பிரபல நடன இயக்குநர் ஜெயந்தி – விஜயகுமார் தம்பதியரின் மகள் கீர்த்தி ஆகியோரின் திருமணம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேரளா ஹவுசில் இன்று நடைபெற்றது. நாளை மாலை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது.           

மேலும் படிக்க

விஜய் நடிக்கும் “புலி” டிரைலர்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தின் புதிய டிரெய்லர் நேற்று இரவு 12 மணிக்கு சோனி நிறுவனம் வெளியிடப்பட்டது. யூடியூபில் வெளியான உடனே விஜய் ரசிகர்கள் அதை கண்டு களித்து ஷேர் செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் டியெய்லர் வெளியான சில மணி நேரங்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஹிட்ஸ் கிடைத்தது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

மேலும் படிக்க

இன்று இரவு 12 மணிக்கு விஜய் நடிக்கும் “புலி” படத்தின் டிரைலர் வெளியீடு

விஜய், ஹன்சிகா, சுருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோரின் நடிப்பில் இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருக்கும் புலி திரைப்படம், விஜய் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக புலி படத்தின் டிரைலர் இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகிறது.அனைவரும் கண்டு மகிழுங்கள் என்று சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. Cant handle the wait? Neither can …

மேலும் படிக்க

ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி”

ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தின் பெயர் “கபாலி” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரஜினி-ரஞ்சித் படத்துக்கு “காளி” என்றும் பெயர் சூட்டப்படவுள்ளதாக செய்திகள் பரவின. இதனைத் தொடர்ந்து ரஜினி படத்தின் பெயர் “கபாலி” என அப்படத்தை இயக்கும் இயக்குநர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. “கபாலி”( K A B A L I )…..magizhchi!!!! …

மேலும் படிக்க

திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சரத்குமார் மனு

தமிழகத்தில் திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லாவிடம் நடிகர் சங்கத் தலைவர் ஆர். சரத்குமார் திங்கள்கிழமை புகார் மனு அளித்தார். அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: திருட்டு சி.டி. விற்பவர்கள் மீது கடந்த 2001 முதல் 2006-ஆம் ஆண்டு வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் காரணமாக அப்போது திருட்டு …

மேலும் படிக்க