சினிமா

வாகன வரி ஏற்றம்

இரு சக்கர வாகனங்களுக்கு இதுவரை எட்டு சதவீதம் வரி வசூலிக்கப்பட்ட வந்த நிலையில், இனி ரூ ஒரு லட்சம் மதிப்புள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதமும், ஒரு லட்சம் மேல் உள்ள வாகனங்களுக்கு பன்னிரண்டு சதவீதம் வரி வசூலிக்கப்படும். பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள வாகனங்களுக்கு பத்து சதவீதம் வரி வசூலிக்கப்படும். இந்த வரி உயர்வு இம் மாதமே அதாவது வருகின்ற 10 ஆம் தேதிக்குள் அமுலுக்கு வரும் என …

மேலும் படிக்க

கண்டெய்னர் லாரிகள் ஓடாது

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு வரும் 6 ந் தேதி முதல் கண்டெய்னர் லாரிகள் மற்றும் டேங்கர் லாரிகள் இயக்க மாட்டோம் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இது பற்றி மோட்டார் வாகன சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கண்டெய்னர் டேங்கர் லாரிக்களுக்கான நாற்பது சதவீத காலாண்டு உயர்வை ரத்து செய்யும் வரை இந்த வேலை நிறுத்தம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்

மேலும் படிக்க

எகிறிடும் வணிக சிலிண்டரின் விலை

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 புதன்கிழமை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது  ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில் மாதத்தின் முதல்நாளான இன்று (நவ.1) வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி ரூ.101.50 …

மேலும் படிக்க

வேகத்துக்கு தடை. நவம்பர் 4 முதல்அமலுக்கு வருகிறது

வாகனங்களின் வேக வரம்பு – சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு. இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் 30 கி.மீ வேகத்தில் மட்டுமே …

மேலும் படிக்க

வேலூர் மாவட்டத்தில் இலவச கண் பரிசோத முகாம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு தாலுகா கிரீன் வேலி மெட்ரிக் பள்ளி புதிய பேருந்து நிலையம் பின்புறம் இன்று வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கிரீன் வேல்யூ கல்வி அறக்கட்டளை மற்றும் மட்றப்பள்ளிநல்ல சமாரியான் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை கண் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தும் திரு ஜாவித்கான் திருமதி ஆயிஷாஜாவித்கான் முன்னிலையிலும் மிகச் சிறப்பாக இம்முகாம்நடைபெற்றது …

மேலும் படிக்க

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்,

*இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் 9 பேர் காணவில்லை என தகவல்!*

மேலும் படிக்க

தாம்பரம் – கடற்கரை இடையே ரயில்கள் ரத்து

இன்று முதல் வரும் 3ம் தேதி வரை தாம்பரம் – கடற்கரை இடையே இரsவு நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரவு நேரங்களில் புறப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உதயமானது

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் கெளரவ தலைவரும், சமூக ஆர்வலருமான ” கலைமாமணி” திரு. PMJF Lion Dr G. மணிலால் MBA , அவர்களது பரிந்துரையின் பேரில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் ராணிப்பேட்டை மாவட்டம் உதயமானது. இதனையொட்டி நடைபெற்ற எளிய நிகழ்வில், திரு. மணிலால் அவர்களது முன்னிலையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், …

மேலும் படிக்க

தமிழ்நாடு தினம்.!* *01/11/2023*

உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர்1-ஆம் தேதி தமிழ்நாடு நாளாக இன்று கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு நாள் விழா இன்று மெட்ராஸ் மாகாணம் என்பது மெட்ராஸ் ஸ்டேட் எனப் பிரிக்கப்பட்ட தினம் தான் நவம்பர் 1-ஆம் தேதி.

மேலும் படிக்க

தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தில் மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா..‌

தென்காசி மாவட்டம் குனராமநல்லூர் ஊராட்சி மத்தாளம் பாறை கிராமத்தில் அம்பாசமுத்திரம் தென்காசி மெயின் ரோட்டில் பஸ் நிழல் குடை அருகில் பெட்டிக்கடை வைத்தும் கோழிக்கூடு போன்ற சாதனங்கள் வியாபாரம் செய்பவர்கள் மெயின் ரோட்டை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் உள்ளது இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் பேருந்து நிழற் கூடை கூட இருப்பது தெரியாமல் அரசு பேருந்து நிற்காமல் செல்வதும் பொது மக்களுக்கு மிகவும் வேதனையாக உள்ளது ஊராட்சி …

மேலும் படிக்க